search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளூர் விடுமுறை"

    • மஹாசிவராத்திரியினை முன்னிட்டு மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
    • மார்ச் 08 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் 23 அன்று வேலை நாளாக அறிவிப்பு

    மஹாசிவராத்திரியினை முன்னிட்டு மார்ச் 8 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    மார்ச் 08 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் 23 (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச் சட்டம் 1881-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துளளார். 

    • இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் 20ம் தேதி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் 20ம் தேதி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. அப்போது சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    இந்நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்காலில் வரும் 20-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
    • மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மார்கழி மாத தேரோட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 26-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்க உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 20-ந்தேதி பணிநாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

    • அடுத்த மாதம் 9-ந் தேதி சனிக்கிழமை, பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
    • அரசு அலுவலகங்களுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் கோவிந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சியில், 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், புதிய ரோடுகள் அமைத்தல், வடிகால், சிறுபாலம், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல் உள்பட பணிகள் நடந்து வருகிறது. நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஏதாவது, ஒரு திட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு பணி என்ற வகையில் நடந்து வருகிறது. இதனால், நகர் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கும், அவதிக்கும் ஆளாகி வருகின்றனர். போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு நிலவுகிறது. எனவே ஒப்பந்ததாரர்கள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொரடாவும் 44 வது வார்டு கவுன்சிலருமான கண்ணப்பன் பேசியதாவது:-

    மாநகராட்சியின் மையப்பகுதியாக, மத்திய பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடங்கிய வார்டாக உள்ளது 44 வது வார்டு. ஆனால் அதிமுக கவுன்சிலர் வார்டு என்பதால் இந்த வார்டில் எந்த பணிகளும் நடைபெறாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்களின் வார்டுகளில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக ஐம்பதாவது வார்டில் 39 பணிகளும், 51 வது வார்டில் 41 பணிகளும், 56 வது வார்டில் 44 பணிகளும், 33 வது வார்டில் 19 பணிகளும் நடைபெற்று உள்ளது. ஆனால் அதிமுக கவுன்சிலர் வார்டான எனது வார்டில் இதுவரை வெறும் 4 பணிகள் மட்டும் நடந்துள்ளது. காரணம் கேட்டால் 44 வது வார்டில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணிகள் முடிந்தவுடன் மற்ற பணிகள் நடக்கவிருப்பதாக கூறுகின்றனர். ஆனால் பக்கத்து வார்டான 51 வார்டிலும் 24 மணி நேர குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அங்கு 41 பணிகள் நடந்துள்ளது. மேலும் 44 வது வார்டில் 24 மணி நேர குடிநீர் திட்டம் பாதி தெருகளுக்கு தான் வந்துள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனரிடம் 300 கடிதம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் அதிமுக கவுன்சிலர் கூறும் குற்றச்சாட்டை கண்டு கொள்வதில்லை. இந்நிலை நீடித்தால் வார்டு மக்களை திரட்டி மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் தினேஷ்குமார் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் எந்த பாகுபாடு காட்டாமல் பணிகள் நடைபெறுவதாக கூறினார்.

    • ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
    • விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகிற 12-ந்தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

    அந்த வகையில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள முருகன் கோவிலுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள் என்பதால், அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகிற 12-ந்தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • “சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆடி 18-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலையின் நினைவிடம், ஓடாநிலையில் உள்ளது

    திருப்பூர்:

    தீரன் சின்னமலை நினைவு தினத்தினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் நிருபர்க ளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, "சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆடி 18-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலையின் நினைவிடம், ஓடாநிலையில் உள்ளது. இந்நிலையில் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெகுவிமரிசையாக அவரது பிறந்தநாள் மற்றும் நினைவுதினம் கொண்டாட ப்படும். ஆங்கிலேயர்களை நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்று, தூக்கிலிடப்பட்ட வீரன் தீரன் சின்னமலையை அனைத்து தரப்பு மக்களும் இதனை கொண்டாடக் கூடிய வகையில், திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

    என்பதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்தோம். அவர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, எனது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆடி 18-ம் நாள் தீரன் சின்ன மலை நினைவு தினத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த உத்தரவை அறிவித்த தமிழக முதல்வருக்கும், பரிந்துரைத்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
    • இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.

    ஈரோடு:

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அரசு வேலை நாளாக உள்ளதால் இவ்விடு முறையை ஈடு செய்யும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் 12-ந் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • உள்ளூர் விமுறை ஈடுசெய்யும் வகையில் 19.08.2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
    • பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது .

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆடித்தபசு திருநாள் 31.07.2023 திங்கள் கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு  உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது . மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் வகையில் 19.08.2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
    • ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.

    ராமநாதபுரம்:

    தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    குறிப்பாக மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அன்றைய நாளில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள். ஆடி அமாவாசையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.

    இந்நிலையில் இந்த வருடம் ஆடி மாத அமாவாசை வரும் திங்கட்கிழமையன்று வருகிறது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜூலை 17-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசை தினமான நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வருகிற 21-ந்தேதி ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது.
    • உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்திட அடுத்த மாதம் 5-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்திட அடுத்த மாதம் 5-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குடியாத்தம் சிரசு திருவிழாவை முன்னிட்டு நடவடிக்கை
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ் வாய்ந்த ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வல திருவிழா 15-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துக்கொள்ள வசதியாக, சிரசு ஊர்வல திருவிழா நடைபெறும் நாளான வருகிற 15-ந் தேதி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    அதற்கு பதிலாக (24.06.2023) சனிக்கிழமை அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், (25.06.2023) ஞாயிற்றுக்கிழமை அச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

    உள்ளூர் விடுமுறை அன்று கருவூலங்களிலும், சார்நிலை கருவூலங்க ளிலும் அரசு பாது காப்புக்கான அவசர அலுவலக பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
    • வருகிற 18-ந் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

     கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயத் தேர்திருவிழா வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவினையொட்டி ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடுகட்டும் வகையில் வருகிற 18-ந் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    உள்ளூர் விடுமுறை நாளன்று ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார் நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். 

    ×